மதுரை திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளி சார்பில் 16 தூண் மண்டபம் முன் மாணவ, மாணவிகள் பங்கேற்ற கரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி 2-ன் முதல்வர் ஏ.ஜெரால்டு தலைமை வகித்தார். பள்ளியின் என்சிசி, சாரண, சாரணிய இயக்கத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், கரோனா பரவுவதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும், என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளை கையாள வேண்டும் என்பது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட நோட்டீஸ்கள், முகக் கவசம் மற்றும் கிருமிநா சினியை வழங்கினர். பள்ளி ஆசிரியர்கள் ஆத்மானந்தம், அமுதா, பத்மபிரியா, ஜெயபிரதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago