மதுரையில் அனைத்திந்திய சித்த மருத்துவ நிறுவனம் முதல்வருக்கு மடீட்சியா வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

அனைத்திந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை மதுரையில் அமைக்க வேண்டும் என்று தமிழக முதல் வருக்கு மடீட்சியா வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து மடீட்சியா தலைவர் பா.முருகானந்தம் வெளியிட்ட அறிக்கை:

சித்த மருத்துவத்தின் தாயகமாக மதுரை திகழ்கிறது. பழமையான சித்த மருத்துவச் சங்கம் மதுரையில்தான் உருவானது. பல தமிழ்ச் சங்கங்கள் இங்கு தோன்றியுள்ளன. மதுரை கோயில்களில்தான் சித்தர் தலங்கள் அதிகம் உள்ளன. மேற்குத் தொ டர்ச்சி மலை அருகே மட்டுமே மூலிகைகள் அதிகளவு உள்ளன. அதனால், மதுரையில் 25-க்கும் மேற்பட்ட சித்த மருந்து உற்பத்தி தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அனைத்திந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை சென்னையில் அமைக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். ஏற் கெனவே, சென்னையில் தேசிய சித்தா நிறுவனம், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் செயல்பட்டு வருகின்றன.

சித்த மருத்துவ நிறுவனம் அமைக்கத் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மதுரையில் உள்ளன. இந்த நிறுவனம் மதுரையில் அமைந்தால் மூலிகைகளின் உற்பத்தி, சந்தை வாய்ப்பு பெருகும். தூத்துக்குடி துறைமுகம் வழியாக மூலிகைகள் ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்புகளும் அதிகமாகும்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்