உள் ஒதுக்கீடு: தமிழக அரசு முடிவை வரவேற்கிறோம் கே.ஆர்.ராமசாமி எம்எல்ஏ பேட்டி

By செய்திப்பிரிவு

மருத்துவப் படிப்பு உள் ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த முடிவை வரவேற்பதாக காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி தெரிவித்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி நேற்று காரைக்குடியில் உள்ள தேவர் சிலைக்கு கார்த்தி சிதம்பரம் எம்பி, காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கே.ஆர்.ராமசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு வேறாக உள்ளது. அதற்காகத்தான் அந்த மசோதாவை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தார்.

உள் ஒதுக்கீடு சம்பந்தமாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவை வரவேற்கிறேன். முதல் முறையாக தமிழக அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஒற்றுமையாக இருப்பதால், இது எந்தளவுக்குச் சாத்தியம் என்ப தை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

திருமாவளவன் மனு தர்மத்தில் உள்ளதைத்தான் கூறியுள்ளார். இதை பெரிய விவாதப் பொருளாக்க வேண்டிய அவசியமில்லை. இதைவிட தமிழகத்தில் பெரிய பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்