சேலத்தில் 115 போலீஸாருக்கு பேரிடர் கால மீட்புப் பயிற்சி

By செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 115 போலீஸாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி வழங்கப்பட்டது.

சென்னை அதிதீவிர பயிற்சி பள்ளியைச் சேர்ந்த எஸ்ஐ கோவிந்தராஜ் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு சேலம் மாவட்டத்தில் முகாமிட்டு, போலீஸாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி வழங்கி வருகின்றனர். சேலம் மாநகர காவல் துறையைச் சேர்ந்த 60 போலீஸார், மாவட்ட காவல் துறையைச் சேர்ந்த 55 போலீஸார் என மொத்தம் 115 போலீஸாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

சேலம் கன்னங்குறிச்சி புதுஏரியில் நடந்த பேரிடர் மீட்பு பயிற்சியில் போலீஸார் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தண்ணீரில் தத்தளிக்கும் மக்களை எவ்வாறு காப்பாற்றுவது, படகு மூலம் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்வது, முதலுதவி சிகிச்சை, மருத்துவ சிகிச்சை அளிப்பது குறித்த செயல்முறை பயிற்சியில் போலீஸார் ஈடுபட்டனர்.

மேலும், மழையின் போது வீட்டுக்குள் இருந்து பொதுமக்கள் வெளியேறாமல் இருப்பது, தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பது உள்ளிட்ட பேரிடர் மீட்புபயிற்சிகளில் போலீஸார் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்