குமாரபாளையத்தில் புதைவட மின்கம்பி அமைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு

By செய்திப்பிரிவு

நாமக்கல்: குமாரபாளையத்தில் நடைபெற்று வரும் புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணியை மாநில மின்வாரிய இயக்கம் மற்றும் பராமரிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

குமாரபாளையத்தில் புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த ஓராண்டுக்கு மேலாக இப்பணி நடைபெற்று வருகிறது. இதில் குமாரபாளையம் - சேலம் செல்லும் பிரதான சாலை, 33 வார்டுகளில் உள்ள கிளை சாலைகளில் இப்பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இப்பணியை மாநில மின்வாரிய இயக்கம் மற்றும் பராமரிப்பு அலுவலர் ஹெலன் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்தும், தரமாக மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார். ஈரோடு மண்டல மேற்பார்வை செயற்பொறியாளர் இந்திராணி, மின்துறை உதவி இயக்குநர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்