முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பு

By செய்திப்பிரிவு

நாமக்கல்: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர வாய்ப்பு அளிக்கப்படுகிறது, என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு:

முப்படைகளைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களின் வாரிசுகளுக்கு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சக இட ஒதுக்கீட்டின் கீழ், நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கீடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

விருப்பமும் தகுதியும் உள்ள முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் நீட் தோ்ச்சி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 25 நாட்களுக்குள் முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் தகுதிச் சான்றிதழ் பெற்றும், ஆவணக் காப்பக அலுவலரிடம் மேலொப்பம் பெற்றும் இணையவழி மூலம் விண்ணப்பம் செய்யலாம். மேலும் விவரம் அறிய முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்