தி.கோட்டை தலைமையிடமாகக் கொண்டு மீனவர் கூட்டுறவு சங்கம் ஏற்படுத்த கோரிக்கை

By செய்திப்பிரிவு

திருச்செங்கோட்டை தலைமையிட மாகக் கொண்டு புதிய மீனவர்களை இணைத்து மீனவர் கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்த வேண்டும், என மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்செங்கோடு அருகே மல்ல சமுத்திரம் கட்டிபாளையத்தில் 57 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இதன்மூலம் 170 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்த ஏரியில் மீன் பிடிக்கும் உரிமை எனப்படும் மீன் பாசி குத்தகையை கடந்த 10 ஆண்டுகளாக பள்ளிபாளையம் மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் தங்கவேல் மற்றும் அவரது உறவினர்கள் மட்டுமே எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிற ஏரிகளிலும் மீன் பிடிக்க இச்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதற்கு அந்தந்தப் பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட பலரை சந்தித்து புகார் கூறியுள்ளனர். அந்த புகாரில் திருச்செங்கோட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மீனவர்களை இணைத்து மீனவர் கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்த வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்