சேலம்: காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால், அணையின் நீர் மட்டம் சரிய தொடங்கியுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை அளவு குறைந்துள்ள நிலையில், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன் தினம் நீர் வரத்து விநாடிக்கு 9,333 கன அடியாக இருந்தது, நேற்று காலை விநாடிக்கு 7,683 கனஅடியாக குறைந்தது. காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 9 ஆயிரம் கன அடியிலிருந்து 12 ஆயிரம் கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 900 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீர் அளவைக் காட்டிலும், திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர் மட்டம் சரிய தொடங்கியுள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் நேற்று முன் தினம் 100.73 அடியாக இருந்தது, நேற்று காலை 100.42 அடியாக சரிந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 65.38 டிஎம்சி.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago