113-வது ஜெயந்தி விழாவையொட்டி திருச்சி, நாகை, கும்பகோணம், பரவாக்கோட்டையில் தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு ஊர்வலமாக முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்து பெண்கள் வழிபாடு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியிலுள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தேவர் ஜெயந்தி விழாவை யொட்டி, அகில இந்திய பார்வர்டு பிளாக் (கதிரவன்) சார்பில் மாநிலச் செயலாளர் வெங்கடேசன், முத்து ராமலிங்கத் தேவர் நல அறக் கட்டளை சார்பில் முருகையாத் தேவர் ஆகியோர் தலைமையில் தேவர் சிலை அருகே யாகம் வளர்க்கப்பட்டு, சிறப்பு வழிபாடு கள் நடத்தப்பட்டன.

அதைத்தொடர்ந்து, அதிமுக சார்பில் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திமுக சார்பில் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் உள்ளிட்டோரும், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் மாநகரச் செயலாளர் மு.அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, கே.என்.அருண் நேரு உள்ளிட்டோரும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல, காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர்கள் ஜவகர், கோவிந்தராஜ் உள்ளிட் டோரும், அமமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனி வாசன் தலைமையில் மாநில அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான் உள்ளிட்டோரும், மதிமுக சார்பில் மாவட்டச் செயலா ளர்கள் வெல்லமண்டி சோமு, சேரன், மணவை தமிழ்மாணிக்கம் உள்ளிட்டோரும், பாஜகவினர் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையிலும் மாலை அணிவித்தனர்.

தேமுதிக சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளர் டி.பி கணேசன் உள்ளிட்டோரும், தமாகா சார்பில் மாவட்டத் தலைவர்கள் நந்தா செந்தில், குணா உள்ளிட்டோரும், பாமக சார்பில் மாவட்டச் செயலாளர் திலீப் குமார் உள்ளிட்டோரும், இந்து முன்னணியினர் மாநில பொதுச் செயலாளர் காடேஸ்வர சுப்பிரமணியன் தலைமையிலும், மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் அருள்ராஜ் தலைமையிலும், அகில இந்திய மூவேந்தர் முன்னணியினர் மணிவேல் தலைமையிலும், பார்வர்டு பிளாக் (பசும்பொன்) கட்சியினர் மாநிலச் செயலாளர் காசி மாயத்தேவர் தலைமையிலும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இதுதவிர, நாம் தமிழர், முக்கு லத்தோர் புலிப்படை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பிலும் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது. தாராநல்லூர், துவாக்குடி, உறையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண் கள் ஊர்வலமாக முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்து தேவர் சிலைக்கு வழிபாடு நடத்தினர்.

தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முத்துராமலிங்கத் தேவரின் படத்துக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் உள்ளிட் டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

கரூரில்...

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி, கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் படத்துக்கு மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக கரூர் நகரச் செயலாளர்கள் வை.நெடுஞ்செழியன், பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில், திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக் குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந் தில்பாலாஜி தேவர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கும்பகோணத்தில்...

தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகே அசூரில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ராம.ராமநாதன், திமுக சார்பில் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் மற்றும் அமமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் சார்பில் நூற்றுக்கணக்கானோர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மத்திய மண்டல ஐ.ஜி. எச்.எம்.ஜெய ராம் தலைமையில், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் மேற் பார்வையில் 750 போலீஸார் கும்ப கோணத்தில் நேற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில்...

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி அருகே பரவாக்கோட்டையில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு பாஜக மாநிலச் செயலாளர் கருப்பு முருகானந்தம், அமமுக மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ், திமுக சார்பில் டி.எஸ்.டி.முத்துவேல், நாம் தமிழர் கட்சி சார்பில் வேதா பாலா ஆகியோர் உட்பட பல்வேறு கட்சி கள், அமைப்புகளின் சார்பில் ஏராளமானோர் மாலை அணி வித்தனர். பரவாக்கோட்டையில் நடைபெற்ற ரத்த தான முகாமில் நூற்றுக்கணக்கானோர் ரத்த தானம் செய்தனர்.

முப்பெரும் விழா

ராஜராஜ சோழன் சதய விழா, மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஆகிய முப்பெரும் விழா திருத்துறைப்பூண்டி இளைஞர் பேரவை சார்பில் நேற்று நடைபெற்றது. பாஜகவின் நாகை மாவட்ட மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, திருவாரூர் மாவட்டத் தலைவர் ராகவன், திருத்துறைப்பூண்டி திமுக நகரச் செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன் உள்ளிட்டோர், மாமன்னர்கள் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் நடைபெற்று, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

நாகப்பட்டினத்தில்...

நாகப்பட்டினம் தேவர் சமுதாயக் கூடத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு சிவசேனா கட்சி சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சுந்தரவடிவேலன், நாகை சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் நீதிபதி ஆகியோர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்