நிரந்தர அடிப்படையில் பணி மாற்றம் டாஸ்மாக் மாற்றுத்திறன் பணியாளர்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

டாஸ்மாக் அலுவலகத்திலோ அல்லது அரசின் பிற துறைகளிலோ நிரந்தர அடிப்படையில் பணி மாற்றம் வழங்க வேண்டும் என்று டாஸ்மாக்கில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகள் வலியு றுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு டாஸ்மாக் மாற்றுத் திறனாளிகள் பணியாளர் நலச் சங்கத்தின் தொடக்கம், புதிய நிர்வாகிகள் அறிவிப்பு, கோரிக்கை மனு அளித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் திருச்சியில் நேற்று நடைபெற்றன. சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.நாச்சியப்பன் தலைமை வகித்தார்.

இதில், தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளை டாஸ்மாக் அலுவலகத்திலோ அல்லது அரசின் பிற துறைகளிலோ நிரந்தர அடிப்படையில் பணி மாற்றம் செய்ய வேண்டும். டாஸ்மாக் துறையில் பணியாற்றும் உபரி பணியாளர்களுக்கு அரசின் பிற துறைகளில் பணி மாற்றம் வழங்கும் போது அலுவலக உதவியாளர், எழுத்தர் ஆகிய பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னு ரிமை அளிக்க வேண்டும்.

அரசின் பிற துறைகள் மற்றும் டாஸ்மாக் அலுவலகத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி களுக்கு ஊதியத்துடன் ரூ.2,500 சிறப்பு ஊதியம் வழங்குவதை போல, டாஸ்மாக் கடை களில் பணியாற்றும் பணியா ளர்கள் அனைவருக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் என்.நடராஜன் பேசியது: கோரிக்கை தொடர்பாக முதல்வர் மற்றும் துறை அமைச்சரின் பார்வைக்கு எடுத்துச் சென்று, சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் நல்ல தீர்வை வழங்குவதற்கு முயற்சி செய்வேன். அதிமுக அரசு உங்கள் கோரிக்கையை கண்டிப்பாக நிறைவேற்றித் தரும் என்றார்.

நிகழ்ச்சியில், சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.அரியகுமார், செயல் தலைவர் எம்.அன்பழகன், பொருளாளர் ஆர்.ஆறுமுகம், துணைத் தலைவர் எஸ்.சாமிநாதன், துணைச் செயலா ளர் பி.செல்வராஜ், திருச்சி மாவட்டத் தலைவர் சந்திரசேகர், செயலாளர் சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்