பெரம்பலூரில் உள்ள மாவட்ட தலைமை அஞ்சலகத்தில் தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறை தலைவர் செல்வக்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அஞ்சலகம் மூலம் பாஸ்போர்ட், ஆதார் கார்டு, பதிவு அஞ்சல், துரித அஞ்சல், அஞ்சல்தலை விற்பனை, மின்கட்டணம் வசூல் போன்றவற்றின் செயல்பாடு மற்றும் கிராமிய ஆயுள் காப்பீடு, செல்வமகள் சேமிப்பு திட்டம், கிசான் விகாஸ் சேமிப்பு பத்திரம் ஆகிய திட்டங்களின் செயல்பாடு, அதன் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து, பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, கிராமிய ஆயுள் காப்பீடு, செல்வமகள் சேமிப்பு திட்டம், கிசான் விகாஸ் சேமிப்பு பத்திரம் ஆகிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதிகளவில் சேமிப்புகளை திரட்ட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகம் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் கோவிந்தராஜ், திருவரங்க கோட்ட அஞ்சலக கண் காணிப்பாளர் விஜயா ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago