மசூதிகளில் மிலாது நபி சிறப்பு தொழுகை

By செய்திப்பிரிவு

பெரம்பலூர்: நபிகள் நாயகம் பிறந்த தினமான மிலாது நபி தினத்தை முன்னிட்டு பெரம்பலூரில் உள்ள முஸ்லிம் வழிபாட்டு தலங்களில் நேற்று சிறப்பு சொற்பொழிவும், உலக நன்மைக்காக சிறப்பு தொழுகையும் நடைபெற்றன.

பெரம்பலூர் நகரம், வாலிகண் டபுரம், லப்பைக்குடிகாடு, வி.களத்தூர், பாடாலூர், விசுவக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மசூதிகளில் நேற்று நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு, அவரது வாழ்க்கைமுறை மற்றும் போதனைகளை பின்பற்றுவதன் அவசியம் குறித்து சொற்பொழி வுகள் நடைபெற்றன. மேலும், உலக நன்மைக்காக சிறப்பு தொழுகைகளும் நடைபெற்றன. இதில், திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

அரியலூர் மாவட்டத்தில்: மிலாது நபி தினத்தையொட்டி, அரியலூர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஜூம்மா பள்ளிவாசல், ஜெயங்கொண்டம் ஜூப்ளி தெருவிலுள்ள பள்ளிவாசல் மற்றும் உடையார்பாளையம், ஆண்டிமடம், செந்துறை, திருமானூர், கீழப்பழுவூர், மீன்சுருட்டி, விக்கிரமங்கலம், தா.பழூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து அந்தந்த பள்ளி வாசல்களில் இமாம்கள் துவா ஆ ஓதினர். இதில் முஸ்லிம்கள் திரளாக கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்