அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பழமை வாய்ந்த சவுந்தரநாயகி அம்பாள் சமேத சோழீஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்குள் உள்ள நந்தவன இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில், நிலத்தை மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் நேற்று முன்தினம் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் போலீஸார், வருவாய் துறையினர் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பில் இருந்த சிவன் கோயில் நிலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் எனக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago