தமிழக மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் எதிராக பாஜக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சஞ்சய் தத் தெரிவித்தார்.
கரூரில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரும் கொள்கையைக் கொண்டதாக பாஜக உள் ளது. நாட்டில் தற்போது வேலைவாய்ப்பின்மையும், பொருளாதார வீழ்ச்சியும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து வாய் திறக்காமல், யாத்திரை போன்ற பல்வேறு விஷயங்களை கொண்டு வந்து திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆளுநர் மாளிகை பாஜகவின் தலைமை அலுவலகமாகவும் செயல்படுகிறது. தமிழக மக்க ளுக்கும், தமிழ் மொழிக்கும் எதிராக பாஜக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழக மக்கள், மக்களவைத் தேர்தலில் எடுத்த நிலைப்பாட் டையே வரும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் எடுக்க முடிவு செய்துள்ளனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் கையெழுத்து இயக்கத்தை காங்கிரஸ் கட்சி நடத்தி வருகிறது. ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு 5 ஆயிரம் கையெழுத்துகள் பெறப்படுகின்றன. தமிழகத்தில் நடைபெறும் கையெழுத்து இயக்கம் 80 சதவீதத்துக்கு மேல் நிறைவடைந்துள்ளது என்றார்.
முன்னதாக சோமூர், திருமுக் கூடலூரில் நடைபெற்ற விவசாய விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் சஞ்சய் தத் பங்கேற்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago