திருச்சி: திருச்சி மாவட்டம் பொன்மலை அருகேயுள்ள ஆலத்தூரில் திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.6 லட்சத்தில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் படம் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
எவ்வித அரசுப் பதவியும் வகிக்காத நபரின் புகைப்படத்தை வைத்தது விதிமீறல் எனக்கூறி அதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், அதிமுக சார்பில் மாநகராட்சி கோட்ட உதவி ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆலத்தூர் பயணிகள் நிழற்குடையில் இருந்த உதயநிதி ஸ்டாலின் படத்தை திமுகவினர் அகற்றிவிட்டு முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தாத்தாவுமான அன்பில் தர்மலிங்கத்தின் படத்தை வைத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago