இந்துமுன்னணி தலைமையில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் நடைபெற்ற போராட்டத்தை அடுத்து, திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை நடத்த, கோயில் நிர்வாகம் ஒப்புதல் அளித்தது.
இக்கோயில்முன் நேற்று காலை நடைபெற்ற போராட்டத்துக்கு இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் பிரம்மநாயகம் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் சுடலை, செல்வராஜ், பக்தர்கள் பேரவை மாவட்ட அமைப்பாளர் குணசீலன், பாஜக மண்டலத் தலைவர் ஆனந்தராஜ், விஸ்வ இந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் ஆறுமுகக்கனி, பாஜக மகளிரணி மாவட்ட பொதுச்செயலாளர் மாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜக மாவட்டத் தலைவர் மகாராஜன், மதிமுக மாவட்டச் செயலாளர் நிஜாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இப்போராட்டத்தை அடுத்து திருக்கோயில் நிர்வாக அதிகாரி ராம்ராஜ், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர், காவல்துறை உதவி ஆணையர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். திருக்கல்யாண திருவிழா நாளை (இன்று) கொடியேற்றத்துடன் தொடங்கி, உட்பிரகாரங்களில் வீதிவலம், திருக்கல்யாணம் நடத்த கோயில் நிர்வாகம் ஒப்புதல் தெரிவித்தது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago