திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

By செய்திப்பிரிவு

திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு அம்மனுக்கு 1,008 சங்கு அபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

இக்கோயிலில் வருஷா பிஷேக விழாவை முன் னிட்டு, அதிகாலையில் நடைதிறக்கப் பட்டு, கும்ப பூஜை மற்றும் 1,008 சங்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து புனித நீர் கும்பங்கள் விமான தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விமானத்துக்கு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் அம்மனுக்கு சங்கு நீரால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனையும், இரவில் புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சைவ வேளாளர் சங்கச் செயலாளர் ப.சந்தனராஜ், முன்னாள் செயலாளர் மெய்கண்டமுத்து, துணைத் தலைவர் வி.சி.ஜெயந்திநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்