குமரி வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆலோசனை

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த், துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழக நிதித்துறை இணை செயலாளராக இருந்த அரவிந்த், கன்னியாகுமரி மாவட்டத்தின் 51-வது ஆட்சியராக நேற்று பொறுப்பேற்றார். மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், அவற்றை விரைந்து முடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவும் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கூறும்போது, ``முதல் முறையாக தென்மாவட்டத்தில் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளேன். குமரி மாவட்டத்தில் உள்ள நிறை, குறைகளை அனைத்துத்துறை அதிகாரிகள், போலீஸாருடன் கலந்தாலோசித்து மாவட்டத்தின் முன்னேற்றத்துக்கான நடவடிக்கை மேற்கொள்வேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்