பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்து பணத்தை திருட முயன்ற சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியில் ஏடிஎம் மையத்துடன் இணைந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை செயல் பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் மையத்தில் நேற்று அதிகாலை புகுந்த மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளனர். ஏடிஎம் இயந்திரத்தின் முன்பக்க கதவை உடைத்தவர்கள் அதனுள் இருந்த லாக்கரை உடைக்க முடியவில்லை. திடீரென அபாய ஒலி எழுந்ததால் மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
அக்கம் பக்கத்தில் வசிப்பவர் கள் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த போது ஏடிஎம் இயந்தி ரத்தின் முன்பக்க கதவு மட்டும் திறந்திருந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் ரத்தினகிரி காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை செய்தனர். மேலும், வங்கி அதிகாரிகள் உதவியுடன் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள் இருவர் முகக்கவசம் அணிந்தபடி ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றது தெரியவந்தது.
இது தொடர்பாக ரத்தினகிரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago