கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில், மேம்பாலம் கட்டும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.
இதனால் உக்கடத்தில் இருந்துஆத்துப்பாலம் செல்லும் வழித்தடத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது. மற்ற வாகனங்கள் செல்வபுரம் பைபாஸ் சாலையில் சென்று, பாலக்காடு சாலையை அடைந்து, செல்லவேண்டிய இடங்களுக்கு சென்றன.ஆத்துப்பாலம் பகுதியில் இருந்துஉக்கடம் வரும் இலகு ரக வாகனங்கள், பெரிய குளம் கரையோர சாலை வழியாக வந்தன.
இந்நிலையில், மேம்பாலத்தின் கீழ் பகுதி சீரமைக்கப்பட்டு, தார்ச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கார், வேன், ஆட்டோ போன்ற இலகு ரக வாகனங்கள்உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் செல்ல காவல்துறையினரால் நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல் குறைந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago