போனஸ் வழங்க வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

கோவை டாடாபாத் பவர்ஹவுஸ் முன்பு சிஐடியு தொழிற் சங்கத்தினர் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் நிறுவனங்கள், அரசுத் துறை ஊழியர்கள், கடைகள், நிறுவனங்கள், சேவைத் துறை ஊழியர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் சட்டப்படியான போனஸ் வழங்க வேண்டும், பண்டிகை கால செலவுக்காக குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் மனோகரன், சந்திரன், ரத்தினகுமார், மதுசூதனன், சரவணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்