புதுச்சேரியில் நேற்று புதிதாக 181 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ் ணாராவ் நேற்று கூறியதாவது:
கடலூர் மாவட்டத்தில் 31 பேருக்கு கரோனா
கடலூர் மாவட்டத்தில் நேற்று 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பாதிப்பு 23,110- ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 42 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் பாதிப்பு 13,668-ஆக உயர்ந்துள்ளது புதுச்சேரியில் 4,001 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப் பட்டது. இதில் புதுச்சேரியில் 121, காரைக்காலில் 8, ஏனாமில் 19, மாஹேவில் 33 என மொத்தம் 181 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் ஒருவர், மாஹேவில் ஒருவர் என 2 பேர்உயிரிழந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை 592 ஆக அதிகரித்துள்ளது.
இறப்பு விகிதம் 1.70 சதவீதமாக உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 34,761 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,123 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 1,597 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின் றனர். வீடுகளில் தனிமைப்படுத் தப்பட்டவர்கள் உட்பட 3,720 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று142 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப் பட்டுள்ளனர்.
20 சதவீதம் பேருக்கு பரிசோதனை
15 லட்சம் மக்கள்தொகை கொண்ட புதுச்சேரியில் 20 சதவீதம் பேருக்கு மேல் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று தினமும் சுகாதாரத்துறை குழுவினர் வீடு வீடாக சென்று பார்த்துவிட்டு ஆய்வு அறிக்கை சமர்ப்பித்து வருகின்றனர். காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் சுகாதாரக் குழுவின் ஆய்வு முடிந்துவிட்டது. புதுச்சேரியில் நவம்பர் 3-ம் தேதிக்குள் ஆய்வை முடிக்கும்படி அறிவுறுத்தியுள்ளேன்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு ‘நெகடிவ்’ என்றுவந்தபிறகு அத்துடன் சுகாதாரத்துறையின் பணி முடிந்துவிட்டது என்று நினைக்க மாட்டோம். அந்த நபருக்கு முழு சிகிச்சையும் முடிந்து எந்த பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக் கொள்வது வரை சுகாதாரத்துறையின் கடமையாகும் எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago