அறிவியல் உருவாக்குவோம் திட்ட போட்டி மேட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி முதலிடம்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி அறிவியல் இயக்கம், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாரீஸ்பல்கலைக்கழகத்துடன் இணை ந்து அறிவியல் உருவாக்குவோம் ஆய்வுத்திட்ட போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதற்காக புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை இணைந்து அறிவியல் உருவாக்குவோம் போட்டிக்கான ஆய்வறிக்கைகள் கோரப்படும்.

இந்நிலையில் 13-வது சர்வதேசஅளவில் அறிவியல் உருவாக்கு வோம் ஆய்வுத்திட்ட போட்டிக்காக புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களிடமிருந்து 50 ஆய்வுத் திட்டங்கள் பெறப்பட்டன. அதிலிருந்து சிறந்த 12 ஆய்வுத் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஊக்கத்தொகையாக ரூ.3 ஆயிரம் (50 யூரோ) வழங்கப்பட்டது.

பின்னர், இந்த ஆய்வுத்திட் டங்கள் வீடியோவாக எடுக்கப்பட்டு, பாரீஸ் பல்கலைக்கழகத் துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு இந்த 12 ஆய்வு திட்டங்களில் இருந்து சிறந்த 4 ஆய்வுத்திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதற்கான பரிசு கடந்த டிசம்பர் மாதம் பிரான்சில் இருந்து வீடியோகான்பரன்சிங் மூலம் அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த ஆய்வறிக்கையாக புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி யின் வழிகாட்டி ஆசிரியை அனிதாமற்றும் மாணவர்கள் மோனிஷ், ஆகாஷ், தருண், மதன்மோகன் ஆகியோின் ‘‘எளிய செயல்பாடுகள் மூலம் எளிய வகையில் அறிவியல் கற்றல்’’ என்ற தலைப்பிலான ஆய்வு செயல்பாடு முதலிடம் பிடித்து ரூ.18 ஆயிரம் (300 யூரோ) வென்றது. இந்நிலையில் தற்போது இந்த பரிசுத்தொகை வழங்கப் பட்டது. முதல் பரிசு பெற்ற மேட்டுப்பாளையம் அரசு உயர்நிலை பள்ளி வழிகாட்டி ஆசிரியை மற்றும் மாணவர்களை கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கி பாராட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்