புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அழகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மேட்டுப்பாளையம் மற்றும் வில்லியனூர் அரசு தொழிற்பயிற்சி (ஐடிஐ) நிலையத்தில், தொழிற்பயிற்சி பிரிவுகளுக்கு உடனடி சேர்க்கை நடக்கிறது. காலியாக உள்ள தொழிற்பயிற்சி பிரிவுகளுக்கான சேர்க்கை நவம்பர் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சி நிலையத்தில் பிட்டர், எலெக்ட்ரிஷியன், ஏசி மெக்கானிக், மோட்டார் மெக் கானிக், கட்டிட பட வரைவாளர், கம்ப்யூட்டர் இயக்குபவர், எலக்ட் ரானிக் மெக்கானிக், பிளாஸ்டிக் செயல்முறை இயக்கு பவர் மற்றும் கம்ப்யூட்டர் பதிவாளர் போன்ற பயிற்சி பிரிவுகளில் சேருவதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், வெல்டர், வயர்மேன், மேசன் (கட்டிடம் காட்டுபவர்) போன்ற பயிற்சி பிரிவுகளில் சேர்வதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் உடனடி சேர்க்கை நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது.
பயிற்சியில் சேர விருப்பம் உள்ள ஆண், பெண் இருபாலரும் 10-ம் வகுப்பு அல்லது 8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், இறுதியாக கல்வி பயின்ற கல்வி நிலையத்திலிருந்து பெறப்பட்ட மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நேரடியாக அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை அணுகவும்.
மாணவர்கள் காலியிடங்கள் உள்ள பயிற்சி பிரிவுகளுக்கு மட்டும் சேர்க்கைக்கான வாய்ப்பு அளிக்கப்படும். முதலில் வருவோருக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
இதேபோல் வில்லியனூரில் இயங்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கட்டிட பட வரைவாளர், கேட்டரிங் மற்றும் விருந்தோம்பல் தொழிற்பிரி வுகளுக்கும் உடனடி சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. என்று கூறியுள்ளார்.
காலியிடங்கள் உள்ள பயிற்சி பிரிவுகளுக்கு மட்டும் சேர்க்கைக்கான வாய்ப்பு அளிக்கப்படும். முதலில் வருவோருக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago