தேசிய தொழில் நெறி பணி திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.49,50,000 நிதியில் விழுப்புரத்தில் மாதிரி தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடங்கிட அனுமதி அளித்தது.விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதிரி தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை ஆட்சியர் .அண்ணாதுரை நேற்று தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:
மாதிரி தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி,கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உளவியல் சோதனைகள் வாயிலாக, அவர்களின் கல்வித் தகுதி, திறன் அடிப்படையில் அவர்களுக்கு ஏற்ற துறைகள் எவை என்பது கண்டறியப்படும். அத்துறைகளில் உள்ள பல்வேறு வேலை வாய்ப்புகளை எடுத்துரைத்து, அத்துறையில் பணி வாய்ப்பினை பெற வழிகாட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதே போல்வேலை வாய்ப்பற்ற இளைஞர் களையும் ஊக்குவித்து, பணிவாய்ப்பினை பெற உரிய வழிகாட்டுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
விழுப்புரம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், கடந்தமாதம் 30-ம் தேதி வரை 2,68,177 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் ஆண்கள் 1,34,284 மற்றும் பெண்கள் 1,33,893 ஆவர். தனியார் வேலைவாய்ப்பு அளிப்பதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் 66 தனியார் நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர் என தெரிவித்தார். இவ்விழாவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநர் பாலமுருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) கலாவதி, விழுப்புரம் வட்டாட்சியர் வெங்கடசுப்பிரமணியம் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago