பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தில் போலி பயனாளிகள் சேர்க்கப்பட்டு கடலூர் மாவட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது.
மாவட்ட ஆட்சியர் சந்திர சேகர்சாகமூரி உத்தரவின் பேரில்வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில்70 ஆயிரத்து 709 போலி பயனாளிகள் கண்டறியப்பட்டனர். இந்தமுறைகேடு தொடர்பாக 13 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். முறைகேட்டில் ஈடுபட்ட 13 பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்த முறைகேடு தொடர்பாக, பெரியபிள்ளையார்மேட்டைச் சேர்ந்தசதீஷ்குமார்(25), வேளாண் துறை ஒப்பந்தத் தொழிலாளரான சிறுப்பாக் கத்தைச் சேர்ந்த கருப்பை யன்(37) ஆகியோரை கடலூர் சிபிசிஐடி போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago