தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க மதுரை வந்த முதல்வர் பழனிசாமிக்கு வழிநெடுக வரவேற்பு

By செய்திப்பிரிவு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க மதுரை வந்த முதல்வர் கே.பழனிசாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மதுரை வந்த முதல்வர் பழனிசாமிக்கு அம்மா கிச்சன் மற்றும் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் விமான நிலையத்தில் இருந்து வழிநெடுக அளிக்கப்பட்ட வரவேற்பு.முதல்வர் பழனிசாமியை வரவேற்ற அதிமுக மகளிர் அணியினர். படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்திமதுரை விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமிக்கு வரவேற்பு அளித்த மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், (வலது) மாநகராட்சி ஆணையர் விசாகன். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (அக்.30) முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதில் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த விழாவில் கலந்து கொள்வ தற்காக முதல்வர் சென்னையில் இருந்து நேற்று மாலை 6.15 மணி அளவில் விமானத்தில் மதுரை வந்தார். முதல்வர் கே.பழனிசாமி 6.50 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார்.

அவரை அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், பாஸ்கரன், எம்எல்ஏக்கள் ராஜன் செல்லப்பா, சரவணன், நீதிபதி, பெரியபுள்ளான் உட்பட கட்சியினர் வரவேற்றனர்.

மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் மற்றும் அதிகாரிகளும் முதல்வரை வரவேற்றனர்.

முதல்வர் கே.பழனிசாமிக்கு அதிமுகவினர் விமான நிலையத்தில் பிரம்மாண்ட கட்-அவுட், பேனர்கள் வைத்து வரவேற்றனர்.

முதல்வரை விமான நிலையத்தில் இருந்து அவர் தங்கியிருந்த சின்னச் சொக்கிகுளம் டிவிஎஸ் விருந்தினர் மாளிகை வரை அதிமுகவினர் வழிநெடுக வரவேற்றனர்.

பெருங்குடியில் எம்எல்ஏ ராஜன்செல்லப்பா தலைமையில் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் முதல்வர் பழனிசாமியை வரவேற்றனர். அவனியாபுரம் அருகே அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அம்மா கிச்சன் பணியாளர்கள் முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர். சின்ன சொக்கிகுளம் அருகே அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையிலான அதிமுகவினர் முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்