தங்கும் விடுதிகளை ஒருங்கிணைக்க புதிய இணைய தளம்

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் சுற்றுலாப் பயணிகளுக்கான தங்கும் விடுதிகளை ஒருங்கிணைக்கும் வகையில் மத்திய அரசு சுற்றுலாத் துறை புதிய இணைய முகப்பைத் தொடங்கியுள்ளது.

இந்த இணைய முகப்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தங்கும் விடுதிகளும் பதிவு செய்து இணைத்துக் கொள்ள சுற்றுலாத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்காக சுற்றுலாத் துறை www.nidhi.nic.in- என்ற தனி இணையதளத்தை தொடங்கியுள்ளது.

இந்த இணைய முகவரியில் சென்று விடுதி நிர்வாகங்கள் பதிவு செய்து, இணைய முகப்பில் இணைத்துக் கொள்ளலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சுற்றுலா அலுவலகம், மேலவெளி வீதி, மதுரை (தொலைபேசி எண் 0452-2334757) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை சுற்றுலாத் துறை அதிகாரி பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்