தீங்கு விளைவிக்கக்கூடிய 6 பூச்சிக்கொல்லிகளுக்கு தடை வேளாண்துறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தீங்கு விளைவிக்கக் கூடிய, ஆறு வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு வேளாண்துறை தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை வாயிலாக, தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை, விவசாயிகள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். ரசாயன பூச்சிக்கொல்லிகளால், உற்பத்தியாகும் உணவுப் பொருட்களுக்கு மட்டுமின்றி, அவற்றை கையாளும் விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

எனவே, தமிழ்நாடு வேளாண் பல்கலை உயர்நிலைக் குழுவின் பரிந்துரைபடி, கார்போபியூரான், மோனோகுரோட்டோபாஸ், அசிபேட், பிரபன்னோபாஸ், பிரபன்னோபாஸ் பிளஸ், சைபர்மத்ரின், குளோரோ பைரிபாஸ் பிளஸ், சைபர்மத்ரின் ஆகிய ஆறு வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்கவும், பயன்படுத்தவும், 60 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்