சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையில், திருச்சியில் நாளை (அக்.31) நடைபெற உள்ள சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணியில் மாநகர மக்கள் பங்கேற்க வேண்டும் என்று ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளது: திருச்சி மாநகரில் சைக்கிள் சவால் குறித்து வலைதளம் மூலம் கருத்துக்கணிப்பு அக்.14-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் மாநகரைச் சேர்ந்த 4,673 பேர் பங்கேற்று தங்கள் கருத்தைப் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்நிலையில், பொதுமக்கள் சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையில், நாளை (அக்.31) காலை 7 மணியளவில் சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணி நடைபெறவுள்ளது. தலைமை அஞ்சல் நிலையம் அருகே தொடங்கும் சைக்கிள் பேரணி, கன்டோன்மென்ட் வழியாக தென்னூர் உழவர் சந்தையில் நிறைவு பெறும்.
அமைச்சர்கள் என்.நடராஜன், எஸ்.வளர்மதி, ஆட்சியர் சு.சிவராசு, மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கவுள்ளனர்.
பேரணியில் பங்கேற்க மாநகர மக்கள் அனைவரும் சைக்கிளுடன் வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago