திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குழி கிராமத்தில் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தால் ரூ.5.5 கோடி மதிப்பில் 45 மீட்டர் உயர கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கலங்கரை விளக்கமானது 20 கடல்மைல் தொலைவில் செல்லும் கப்பல்களுக்கும், மீன்பிடி படகுகளுக்கும் சமிக்ஞைகளை தெரிவிக்கும்.
மேலும் இதிலுள்ள தொழில்நுட்ப கருவிகள் மூலம் வெளிநாட்டு கப்பல்களின் போக்குவரத்தை கண்காணிக்க முடியும். இந்த கலங்கரை விளக்கத்தை காணொலி காட்சி மூலம் டெல்லியில் இருந்து மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா திறந்து வைத்தார்.
முன்னதாக மத்திய அரசு அதிகாரி இ.மூர்த்தி வரவேற்றார். ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை தனது அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் வாழ்த்துரை வழங்கினார். திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம், கப்பல் போக்குவரத்து துறை செயலாளர் சஞ்சீவ் ரஞ்சன் உரையாற்றினர். கப்பல் போக்குவரத்து துறை இயக்குநர் வெங்கட்ராமன் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago