திருப்பத்தூர்: வாணியம்பாடி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடப்பாண்டுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து தொழிற் பயிற்சி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வாணியம்பாடியில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2020-ம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை விண்ணப்பங்கள் மற்றும் நேரடி கலந்தாய்வும் கடந்த 22-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதற்கான கல்வி தகுதி 10-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர் கண்டிஸனர், மெக்கானிக் மோட்டார் வெய்க்கிள், லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் மெக்கானிக், நவீன ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் ஆகியவற்றில் சேர விண்ணப்பிக்கலாம். அதேபோல, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆண் மற்றும் பெண் இருபாலரும், தோல் பொருள் உற்பத்தியாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை. ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் சேர கட்டணம் ஏதும் கிடையாது.
பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகை, விலையில்லா சீருடை மற்றும் அதற்கான தையற்கூலி, விலையில்லா பாடப்புத்தகம், மிதிவண்டி, மடிக்கணினி, வரைப்படக்கருவிகள், இலவச பேருந்து பயண அட்டை ஆகியவை வழங்கப்படும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago