அரசு கல்லூரியில் ஆன்லைன் வகுப்புகள்

By செய்திப்பிரிவு

சோளிங்கர்: சோளிங்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், ஆங்கில வழியில் பி.காம்., பி.எஸ்.சி கணினி அறிவியல் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. தற்போது, முதலாம் ஆண்டுக்கான பாடப்பிரிவுகளில் 240 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளதாக கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரங்கநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்