கரும்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

ஆம்பூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சாமிநாதன் தலைமை வகித்தார். விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் சக்திவேல், மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அருள்சீனிவாசன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், சர்க்கரை ஆலையை தொடர்ந்து நடத்த வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்க மிட்டனர். ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு தலைவர் ராமச்சந்திரன், பேரணாம்பட்டு வட்ட செயலாளர் குணசேகரன், சர்க்கரை ஆலை சிஐடியு செயலாளர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கரும்பு விவசாயிகளின் சங்கத் தலைவர் கோவிந்தன் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு, கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு ஒன்றை சர்க்கரை ஆலை அதிகாரிகளிடம் விவசாய சங்கம் சார்பில் வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்