திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை குறைக்க எஸ்பி விஜயகுமார் ஆய்வு

By செய்திப்பிரிவு

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை குறைப்பது குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேற்று ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அடிக் கடி விபத்துகள் நடக்கின்றன. குறிப்பாக ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் நாட்றாம்பள்ளி பகுதியையொட்டியுள்ள தேசிய நெடுஞ் சாலைகளில் தினசரி ஏதாவது ஒரு பகுதியில் விபத்து நேரிட்டு, உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் விபத்துகளை குறைக்க திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஆம்பூர் அடுத்த மாதனூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அவர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது விபத்துகளை குறைப்பது குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோனை நடத்தினார்.

அப்போது, வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன், ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சச்சி தானந்தம், ஆம்பூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் திருமால், மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பழனி, தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்