ஆம்பூர்: ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் டாஸ்மாக் கடையில் மதுபான பாட்டில்களை வாங்கி கள்ளத்தனமாக விற்பனை செய்ய சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் கரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபானக் கடைகள் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளன. புறவழிச்சாலை பகுதியில் ஒரே இடத்தில் 3 அரசு டாஸ்மாக் கடைகளில் இருந்து, ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் சுமார் 148 மதுபான பாட்டில்களை ஆட்டோவில் ஏற்றிகொண்டு கள்ளத்தனமாக விற்பனை செய்ய எடுத்து சென்றார்.
அப்போது, அவ்வழியாக வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் தமிழரசி, உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமையிலான மதுவிலக்கு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ஆட்டோவில் சோதனை செய்தபோது மதுபான பாட்டில்கள் கொண்டுசெல்வதை அறிந்து பிரபுவை கைது செய்து அவரிடம் இருந்த 148 மதுபான பாட்டில்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago