செமிகண்டக்டர் தயாரிப்புக்கு ரூ.76,000 கோடி ஒதுக்கீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By செய்திப்பிரிவு

தற்போது உலகம் முழுவதும் செமிகண்டக்டருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கார்தயாரிப்பு முதல் மின்னணு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் வரையில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

செமிகண்டக்டர் தயாரிப்பில் தைவான் முதன்மை இடத்தில் உள்ளது. இந்தியா அதன் செமிகண்டக்டர் தேவைக்கு முழுமையாக வெளிநாடுகளை சார்ந்தே உள்ளது. பெருமளவில் இந்தியா சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது.தற்போது இந்தியா ஆண்டுக்கு 24 பில்லியன் டாலர் மதிப்பில் செமிகண்டக்டரை இறக்குமதி செய்கிறது. இது 2025ம் ஆண்டில் 100 பில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவிலே செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் தயாரிப்புக்கான கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதுதொடர்பாக அடுத்தஆறு ஆண்டுகளுக்கு ரூ.76,000 கோடி செலவிட மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. தைவான் செமிகண்டக்டர் நிறுவனமான டிஎம்சி, இண்டல்,ஏஎம்டி உள்ளிட்ட நிறுவனங்களுடன் கலந்தாலோசனையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்