நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் புதிதாக 5,784 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 5,784 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று அதிக பட்சமாக கேரளாவில் 2,434 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. நாட்டில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து 3 ஆயிரத்து 644 ஆக உயர்ந்தது.
கரோனா தொற்றால் ஒரே நாளில் 252 பேர் இறந்துள்ளனர். இதனால் கரோனாவால் இதுவரை இந்தியா முழுவதும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,75,888 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 7,995 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 41 லட்சத்து 38 ஆயிரத்து 763 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 88,993 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 571 நாட்களில் இல்லாத அளவு குறைவாகும். நாடு முழுவதும் ஒரே நாளில் 66,98,601 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை மக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ் களின் எண்ணிக்கை 134 கோடி யைக் கடந்துள்ளது.
இத்தகவல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. - பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago