புதுடெல்லி: தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கரோனாவான ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவிலும் பரவி உள்ளது. நேற்று முன்தினம் வரை இந்தியாவில் இந்த வைரஸால் 41 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ராஜஸ்தான், டெல்லி மாநிலங்களில் தலா 4 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் ஒமைக்ரான் வகை வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49-ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த நவ. 21-ல் தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த அந்நாட்டு மருந்து நிறுவன ஊழியர் ஒருவரை வீட்டில் தனிமையில் இருக்க உத்தரவிட்டனர். இதனிடையே அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது டிசம்பர் 2-ம் தேதி தெரியவந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அவரை தேடியபோது, அந்த நபர் நவ. 27-ல் போலி ஆர்டி-பிசிஆர் சான்றிதழ் பெற்று நாட்டை விட்டு வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பெங்களூரு போலீஸார், போலி கரோனா சான்றிதழ் கொடுத்ததாக எஸ்.ஆர். பரிசோதனை மையத்தைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago