இந்தியா நடத்திய நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கக் கூடிய நீண்ட தூர சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கக் கூடிய நவீன ரக நீண்ட தூர டார்ப்பிடோ சூப்பர்சோனிக் ஏவுகணை (ஸ்மார்ட்) நேற்று சோதித்தது. ஒடிசாவில் உள்ள பாலசோர் கடற்கரையில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக இருந்ததாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டிஆர்டிஓ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கக் கூடிய இந்தவகை ஏவுகணையில் டார்ப்பிடோவை இணைத்து சோதனைநடத்தப்பட்டது. இந்த வகை ஏவுகணை துல்லியமாக இலக்கைத் தாக்கியது. இதையடுத்து சோதனை வெற்றி பெற்றுள்ளது. மேலும் சில சோதனைகள் இந்தவகை ஏவுகணையில் மேற்கொள்ளப்படவுள்ளன.
கடந்த சனிக்கிழமை ராஜஸ்தானின் பொக்ரான் பகுதியில் ஹெலிகாப்டரிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை கவச வாகன இலக்கை வெற்றிகரமாகத் தாக்கியது. இந்தவகை ஏவுகணைகள் இந்திய விமானப் படைக்காகத் தயாரிக்கப்பட்டவையாகும்.
இதைத் தொடர்ந்து பினாகா வகை ராக்கெட் சோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago