அரசு திட்டங்கள் தாமதம் அதிகாரிகள் மீது கட்கரி புகார் :

By செய்திப்பிரிவு

கட்டுமான சட்டம் மற்றும் நடுவர் மன்றம் தொடர்பாக டெல்லி யில் நடந்த கருத்தரங்கில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:

அரசு கட்டமைப்பில் முடிவு களை எடுக்காமல் இருப்பது மற்றும் முடிவெடுப்பதில் தாம தம் செய்வது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. முடிவுகளை எடுப்ப தில் மிகவும் தாமதம் ஏற்படுவதால் திட்டங்களுக்கான செலவும் அதிகரிக்கிறது. மேலும் கட்டுமான திட்டங்களில் நிதி, ஒப்பந்தம் தொடர்பான வழக்குகளில் ஏற்படும் கால தாமதத்தாலும் திட்டங்கள் தாமதமாகின்றன. இந்த வழக்குகளில் விரைவில் தீர்வு காணும் வகையில் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

அரசின் திட்டங்கள் தாமதமாக செயல்படுத்தப்படுவதில் அதிகாரி களுக்கும் பங்கு உள்ளது. அவர்கள் விரைவில் முடிவு செய்து திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.. மாதம் தோறும் சம்பளம் வாங்கும் அதிகாரிகளுக்கு நேரத்தின் மதிப்பு புரியவில்லை. வழக்கறிஞர்கள் ஒரு வழக்கில் அடிக்கடி வாய்தா கேட்பதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி பேசினார். -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்