27 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு : மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் :

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டில் சில மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக ஒமைக்ரான் தொற்றும், ஏற்கனவே இருக்கும் கரோனா வகை தொற்றும் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுபோல் கரோனா பரவல் அதிகம் இருக்கும் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நாட்டிலேயே 27 மாவட்டங்களில் தான் தற்போது தொற்று பரவல் அதிகமாக உள்ளது. எனவே, அந்த மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். ஓரிடத்தில் மக்கள் கூடுவதை தவிர்ப்பது, திருமணம் அல்லது இறப்பு நிகழ்வுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மக்களை அனுமதிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சகம் சார்பில் நவம்பர் மாதத்திற்கான பொருளாதார அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில்,”இந்தியாவின் பொருளதார வளர்ச்சியில் ஒமைக்ரான் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. கரோனா தடுப்பூசி அதிக அளவில் செலுத்தப்படுவது; வெளிநாடுகளிடம் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்வரும் நாட்களில் மேலும் வலுவானதாக இருக்கும்‘‘ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்