கடந்த 24 மணி நேரத்தில் 7,992 பேருக்கு கரோனா : உயிரிழப்பு 4.75 லட்சத்தை தாண்டியது

By செய்திப்பிரிவு

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7,992 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 393 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை 4.75,128 பேர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 44 நாட்களாக தொடர்ந்து தினசரி தொற்று 15 ஆயிரத்துக்கும் கீழாக உள்ளது. தற்போது 93,277 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் குணமடைவோர் 98.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. தினசரி பாசிட்டிவ் 0.64 சதவீதமாகவும், வாராந்திர பாசிட்டிவ் 0.71 சதவீதமாகவும் குறைந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 3 கோடியே 41 லட்சத்து 14,331 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல் 131.99 கோடி டோஸ்தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.

3-வது இடத்தில் இந்தியா

நாடு முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 4.75 லட்ச மாக அதிகரித்துள்ளது. கரோனா உயிரிழப்பில் அமெரிக்கா (8.2 லட்சம்), பிரேசில் (6.2 லட்சம்) ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. எனினும், கடந்த 64 நாட்களாக இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்