டெல்லி நீதிமன்றத்தில் : குண்டு வெடித்ததால் பரபரப்பு :

By செய்திப்பிரிவு

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் நேற்று குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வடமேற்கு டெல்லியில் உள்ள ரோகிணி நீதிமன்ற வளாகத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் திடீரென பலத்த சத்தத்துடன் மர்மப் பொருள் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

வெடிப்பொருள் வெடித்ததில் தரையிலும் சிறிய பள்ளம் ஏற்பட்டது. இதனால், நீதி மன்றத்தில் பரபரப்பும் பதற்ற மும் ஏற்பட்டது. நீதிமன்ற நடவடிக் கைகள் நிறுத்தப்பட்டன. அந்த பகுதியில் மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டது.

நீதிமன்ற வளாகத்தில் இருந்த லேப் டாப் கம்ப்யூட்டர் பையில் குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டு வெடித்ததாகவும் தடய அறிவியல் நிபுணர்களும் தேசிய பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்தில் ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டதாகவும் வெடிபொருள் சாதனமும் டிபன் பாக்ஸ் போன்ற பொருளும் கைப்பற்றப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரி பிரணவ் தயாள் தெரிவித்தார். நாட்டு வெடிகுண்டாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. காயமடைந்த ஒருவர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இதே டெல்லி ரோகிணி நீதிமன்றத் தில்தான் கடந்த செப்டம்பர் மாதம் பிரபல ரவுடி ஜிதேந்தர் கோகி உள்ளிட்ட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்