பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் 1200க்கும் அதிகமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகளில் கரோனா கட்டுபாட்டு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மைசூரு மாவட்டம் பைலுகுப்பேவில் உள்ள திபெத் லாமா முகாமில் சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்குள்ள திபெத்தியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 23 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. எனவே 23 பேரும் திபெத் முகாமிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 650 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மைசூரு மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் மருத்துவர் ஷரத் நேற்று திபெத் முகாமில் ஆய்வு செய்தார். அங்கு நோயாளிகளுக்கு தேவையான அனைத்து சிகிச்சை வசதிகளையும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago