ஒமைக்ரான் பாதித்த கர்நாடக மருத்துவருடன் : தொடர்பில் இருந்தவர்களுக்கு பாதிப்பு இல்லை :

By செய்திப்பிரிவு

பெங்களூரு: பெங்களூருவில் கடந்த 2-ம் தேதி தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 66 வயதான மருந்து நிறுவன ஊழியருக்கும், 46 வயதான உள்ளூர் மருத்துவருக்கும் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. 14 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்காமல் தப்பியோடிய தென்னாப்பிரிக்க நோயாளி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருந்து நட்சத்திர விடுதி ஊழியர்கள், டாக்ஸி ஓட்டுநர் உள்ளிட்ட 218 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது. மேலும் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட 46 வயது மருத்துவருக்கு அந்த தொற்று நீங்கியுள்ளது. என்றாலும் அவருக்கு மீண்டும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். இவருடன் தொடர்பில் இருந்த மனைவி, இரு மகள்கள் உள்ளிட்ட 5 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் அவரது 5 வயது மகள் குணமடைந்துள்ளார்.

இந்நிலையில் அந்த 5 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஒமைக்ரான் சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் 5 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்துள்ளது. ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்றும், 4 பேருக்கு உருமாறிய டெல்டா வைரஸ் தொற்றும் உள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட 2 பேருடன் தொடர்பில் இருந்த 650 பேருக்கு பலகட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் யாருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரியவந்தது. ஒமைக்ரான் பரவல் வேகம் குறைவாக உள்ளது இதன் மூலம் தெரிகிறது. பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியும் ஒரே வாரத்தில் மீண்டுவிட்டார். அவருக்கும் தீவிரமற்ற அறிகுறிகளே இருந்தன” என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்