டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கி பேசியதாவது:
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 13 மாதங்களாக போராட்டம் நடத்தினர். காங்கிரஸும் எதிர்க்கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தன. கடைசியில் விவசாயிகளின் போராட்டத்துக்குப் பணிந்து வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது. இந்தப் போராட்டத்தில் 700-க்கும் அதிகமான விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்களது தியாகத்தைப் போற்றி வணங்கு கிறோம்.
வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட போது எப்படி ஜனநாயகமற்ற முறையில் கொண்டு வந்தார் களோ அதேபோல நாடாளுமன்றத்தில் விவாதம் இல்லாமல் ஜனநாயக மற்ற முறையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது.
விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் தொடர்ந்து செயல்படும். அவர்களது கோரிக்கைகள் நிறை வேற்றப்பட வேண்டும். உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
நாகாலாந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்த சம்பவத்தில் அரசு வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது. அவர்களுடைய குடும்பத்திற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். மாநிலங்களவை எம்.பி.க்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது அராஜகமான போக்கு. இது அரசியல் சாசனத்துக்கும் விதி முறைகளுக்கும் எதிரானது. அவர்களது இடைநீக்கத்தை உட னடியாக ரத்து செய்ய வேண்டும்.
விலைவாசி உயர்வு
அத்தியாவசியப் பொருட்கள் விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகள், சாதாரண மக்களின் நலனில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்குஅக்கறை இல்லை. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.கடந்த கரோனா அலையில் இருந்து மத்திய அரசு பாடம் கற்றுக் கொண்டிருக்கும் என்று நம்புகிறேன். ஒமைக்ரான் தொற்று மக்களை பாதிக்காதவாறு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago