திருமலையில் துப்புரவு தொழிலாளர் போராட்டம் :

By செய்திப்பிரிவு

திருப்பதி கே.டி சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அலுவலகம் முன் கடந்த 10 நாட்களாக ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராட்டம் செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கடந்த 10 நாட்களாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருமலையில் பல பணிகள் தேங்கி கிடப்பதாக பக்தர்கள் குறை கூறுகின்றனர்.

குறிப்பாக அறைகளை சுத்தம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. மிகக் குறைந்த தொழிலாளர்களை வைத்துக் கொண்டு தனியார் நிறுவனம் இப்பணிகளை செய்து வருகிறது. இதன் காரணமாக பக்தர்கள் தங்கும் அறைகளை பெறுவதில் மிகவும் தாமதமாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்