பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி :

By செய்திப்பிரிவு

இந்தியாவின் பிரம்மோஸ் ரக ஏவுகணைகளின் தாக்கும் திறன் அடிக்கடி சோதித்துப் பார்க்கப்படுவது வழக்கம். அதன்படி, ஒடிசாவின் சந்திப்பூர் கடற்கரை பகுதியில் பிரம்மோஸ் அதிவேக ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.

விமானப் படையின் போர் விமானமான சுகோய் 30 எம்கே-ஐரக விமானத்தில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்ட தாகவும் குறிப்பிட்ட நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாகவும் தெரியவந்துள்ளது. இது சோதனையில் முக்கிய மைல்கல் ஆகும்.

இந்த பிரம்மோஸ் ஏவுகணை வானில் இருந்து செலுத்தப்பட்டது. தொடர்ந்து வானில் இருந்துசெலுத்தும் ஏவுகணை சோதனைகளுக்கு இதன்மூலம் வழி கிடைத்துள்ளது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்