மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 8,439 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில் 9,525 பேர் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர். நாட்டில் தற்போது 93,733 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதன்கிழமை காலை 8 மணி யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 195 பேர் வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,73,952 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது தினசரி பாதிப்பு விகிதம் 0.70 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 0.76 சதவீதமாகவும் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago